வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் கூட்டுத்தாபனம் (NWCL), 200 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டு மகாபொல நிதியத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிதியமாக உருவாக்கப்பட்டது. இது அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் கம்பெனியாக 2003 மார்ச் 23ஆம் திகதி கூட்டிணைக்கப்பட்டது. முதலீட்டு முகாமையாளர் என்ற வகையில் வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் கூட்டுத்தாபனம் (NWCL) முதலீட்டு முகாமையாளராக இடர் குறைவாக அதன் வருமானத்தை அதிகரிப்பதை செயல் நோக்கமாகக் கொண்டு MTFஇன் விடயங்களை முகாமைப்படுத்துகின்றது. வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் கூட்டுத்தாபனம் (NWCL) ஆவுகுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகின்றது.
- உயர்ந்த பெறுபேறுகளைத் தரும் முதலீட்டு மூலோபாயங்கள்
- இடர் மதிப்பீட்டு மற்றும் தணிக்கும் மூலோபாயங்கள்
- நிதிசார்ந்த துறை சந்தைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறந்த கொள்கைகளையும் கைத்தொழில் - அனுபவங்களையும் பயன்படுத்தி முதலீட்டு சூழலைப் பகுப்பாய்வுசெய்தல்.
- பாதுகாப்பையும் உயர் வருமானத்தையும் தருகின்ற நிதிசார் உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் பிணையங்கள் (NWSL)
அரசாங்க வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் சம்பெனி என்ற வகையில் வரையறுக்கப்பட்ட தேசிய வெல்த் பிணையங்கள் (NWSL) 2003 யூன் மாதம் 23ஆம் திகதி கூட்டிணைக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாட்டு விடயத்திற்கும் பதிவுசெய்யப்பட்ட பொருள் கையிருப்பு மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்திற்கும், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்திற்கும் அமைவாக முதனிலை வியாபாரியாக வியாபாரத்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கம்பெனி பதிவுசெய்யப்பட்டது. தேசிய வெல்த் பிணையங்கள் (NWSL) 2004ஆம் ஆண்டு 300 மில்லியன் ரூபா பங்கு மூலதனத்திற்காக அதன் சொந்த தேசிய வெல்த் பிணையங்களை (NWSL) முதலீடு செய்தது.