மகாபொல எண்ணக்கருவின் கீழ் அமுலாக்கப்பட்ட வெற்றிகரமான நிகழ்ச்சித்திட்டம் மகாபொல கண்காட்சியும் வர்த்தக சந்தையுமாகும். இது இலங்கைக்கு பல சமூக பொருளாதார நன்மைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கிராமிய மற்றும் கிராம சார்புடைய மக்கள் உள்நாட்டில உற்பத்தி செய்த தமது உற்பத்திகளை வர்த்தக கூடங்களில் விற்பனைசெய்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த ஏழுநாள் வர்த்தக சந்தை சிறு அளவிலான பொறுப்புமுயற்சியாளர்களுக்கு இடமும் தமது உற்பத்திகளை விற்பதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதோடு, தமது வாயிலிலேயே பல்வேறு அரச மற்றும் அரச-சார்பற்ற நிறுவகங்களின் உற்பத்திகளையும் சேவைகளையும் பற்றிய அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளுவதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தது.
வர்த்தக சந்தை மற்றும் கல்வி கண்காட்சி கிராமிய பாடசாலைகளில் ஒழுங்குசெய்யப்பட்டன. அதற்கான நுழைவுக் கட்டணங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் அப்பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட்டன. முதலாவது மகாபொல வர்த்தக சந்தை கண்காட்சி 1981ஆம் ஆண்டு சனவரி மாதம் பண்டாரவெல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.
1980 முதல் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் பெருமளவில் மகாபொல வர்த்தக சந்தையில் அவர்களுடைய ஆர்வத்தையும் அவர்கள் கவரப்பட்டதையும் எடுத்துக்காட்டத் தொடங்கினர். இருப்பினும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து அது குறைந்துவிட்டது. கண்காட்சிகள் மிகையான வருமானத்தைப் பெறாததன் காரணமாக மகாபொல கண்காட்சியும் வர்த்தக சந்தையும் கடந்த சில வருடங்களாக செயலிழந்துவிட்டது.