1983ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது லொத்தர் நிலையம் எனக் குறிப்பிடப்பட்டு தற்பொழுது அபிவிருத்தி லொத்தர் சபை எனக் குறிப்பிடப்படுகின்றது. நிதி மேம்பாட்டுக்காக அரசாங்கத்திற்கு உதவுவது இந்த நிலையத்தின் பிரதான நோக்கமாகும். அதன் விளைவாக, 1993ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் நிலையம் "அபிவிருத்தி லொத்தர் நம்பிக்கை பொறுப்பு" என்று குறிப்பிடப்படுகின்ற நம்பிக்கைப் பொறுப்பாக உருவாக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க அபிவிருத்தி லொத்தர் சபை சட்டத்தின் கீழ் 'அபிவிருத்தி லொத்தர் சபையாக மாற்றப்பட்டது.

மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியம் அபிவிருத்தி லொத்தர் சபையில் 2.2 மில்லியன் ரூபாவை முதலீடுசெய்தது. இந்த சபையில் மகாபொல உயர் கல்வி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் அல்லது அவருடைய பிரதிநிதி உள்ளடங்குகிறார்.

அபிவிருத்தி லொத்தர் சபையினால் உற்பத்திசெய்யப்படுகின்ற வருமானம் நேரடியாக சனாதிபதி நிதியத்தில் வரவுவைக்கப்படுகின்றது. பின்னர் 50% இலாபம் மகாபொல உயர் கல்வி புலமைப்பரிசு நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு அனுப்பப்படுகின்றது.

அபிவிருத்தி லொத்தர் சபை
இல.356, டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 02.
தொலைபேசி : +94 114 824 824
மின்னஞ்சல் : info[at]dlb.lk