லலித் அத்துலத்முதலி மகாபொல புலமைப்பரிசு இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. அவையாவன திறமை அடிப்படையிலான புலமைப்பரிசு மற்றும் சதாரண புலமைப்பரிசு.

  • திறமை அடிப்படையிலான புலமைப்பரிசு
    • திறமை அடிப்படையிலான புலமைப்பரிசு கபொத (உ/த) அதிசிறந்த பெறுபேறுகளைக் காட்டுகின்ற மாணவர்களுக்கு மொத்த புலமைப்பரிசிலில் 10% இந்த பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது.
  • சதாரண புலமைப்பரிசு
    • சதாரண புலமைப்பரிசு கபொத (உ/த) செயலாற்றுகையையும் குடும்ப வருமானத்தையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது. மொத்த புலமைப்பரிசிலில் 90% இந்த பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது.

மகாபொல புலமைப்பரிசுக்கு தகைமை அளவுகோல்

பின்வரும் தேவைகளைத் திருப்திகரமாகப் பூர்த்திசெய்கின்ற மாணவர்கள் இந்தப் புலமைப்பரிசுக்குத் தகுதி பெறுகின்றனர்.

  • மாணவர் இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்.
  • அவர் பல்கலைக்கழகத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்வி நிறுவகமொன்றில் முழு நேர பாடநெறியைக் கற்பதற்காகப் பதிவுசெய்துகொண்டுள்ள மாணவராக இருக்க வேண்டும்.
  • பெற்றோரின் வருமான அளவு
    • பெற்றோரின் வருமானம் கல்வி ஆண்டான 2017/2018லிருந்து வருடாந்த வருமானம் 500,000/- ரூபாவுக்கு குறைவாக அல்லது அதற்கு சமமாக இருத்தல் வேண்டும்
    • 2017/2018 கல்வி ஆண்டுக்காகப் பதிவுசெய்து கொண்டுள்ள மாணவர்களுக்காக மேலுள்ள வருமான அளவு செயற்படும். எவ்வாறாயினும் இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக இந்த செல்லுபடியான திகதிக்குள் அடங்காமல் எந்த நிதி உதவியையும் பெறத் தகைமை பெறாத மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களின் வருமானம் மீளாய்வு செய்யப்பட்ட வகைக்குள் அடங்குமானால் மகாபொல புலமைப்பரிசுக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • மாணவர்களை புலமைப்பரிசுக்குத் தெரிவுசெய்யும் போது, மாணவாரின் பெற்றோர் பிரிந்திருந்தால் அவர்களின் பிரிவுக்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு ஆவண சாட்சியம் இல்லாவிட்டால், வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு கிராம உத்தியோகத்தரின் மற்றும் குறித்த பிரிவின் பொலிசின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் வருமான உறுதிப்படுத்தல் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • மாணவன் தொழில் செய்வதாக இருந்தால் அந்த தொழில் இருந்து கிடைக்கும் வருமானம் பெற்றேரின் வருமானத்துடன் சேர்க்கப்படுதல் வேண்டும்.
  • மாணவன் தொழில் செய்பவராகவும் திருமணம் செய்துள்ளவராகவும் இருந்தால் மாணவரும் அவருடைய வாழ்க்கைத் துணையும் தனிக் குடும்பமாக கருதப்படும். அத்துடன் மேலே (பெற்றோரின் வருமானம்) குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களுக்கும் ஒழுங்கு விதிகளுக்கும் அமைவாக அவருடைய மகாபொல பெறுவதற்கான தகைமை உறுதிசெய்யப்படும்.