மஹபொல புலமைப்பரிசில் வழங்குவது ஆரம்பிக்கப்பட்டு கடந்துபோன 35 வருடங்களுக்கு மேலாக மாதாந்த தவணைப் பண கொடுப்பனவுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்குத் தேவைப்படுகின்ற நிதியங்கள் ஒரே தொகையாகவே வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு இருக்கின்ற மீண்டுவரும் ஒதுக்கீட்டின்படி செலுத்தப்படுகின்றது.
இந்த கொடுப்பனவு முறையில் மாணவனின் தனிப்பட்ட கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை முறைக்கு அதிக காலம் செலவாகின்றது. பல்கலைக்கழகங்களில் ஒழுங்கானமுறையில் நிதியங்கள் கிடைக்காமையால் புலமைப்பரிசில் கொடுப்பனவு மேலும் தாமதமடைகின்றது.
அதற்கு அமைவாக மஹபொல நம்பிக்கை பொறுப்பு நிதிய பணிப்பாளர் மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கான மீள் கட்டமைப்பை முன்மொழிந்தார். அது நம்பிக்கை பொறுப்பாளர்களின் 68வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கொள்கையளவில் புதிய கொடுப்பனவு முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு உடன்பட்டது.
மாதாந்த புலமைப்பரிசில் தவணைக் கொடுப்பனவை (ரூ. 5,000/-) ஒரே நேரத்தில் செலுத்துவதற்கு திறைசேரி நேரடியாக மஹபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு மாற்றியது.
புதிய கொடுப்பனவு முறைமையின் கீழ்,
- மஹபொல புலமைப்பரிசில் தவணைக் கொடுப்பனவு நேரடியாக மாணவனின் வங்கிக் கணக்கிற்று அனுப்பப்படுகின்றது.
- கொடுப்பனவு பற்றி மாணவனுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்படும்.
- கொடுப்பனவு விபரங்களை மஹபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அலுவலக இணையத்தள பக்கத்தில் பார்க்க முடியும்.